Tuesday, June 18, 2013

Jamaaliya Thottaththil Koidha Malar




மிஹ்ராஜ் விளக்கம்


 " லா மகான் " என்பது வெட்டவெளியாகிய மைதானமாகும். ஜிஸ்மு (உடல் ) ஸ்துலமாகும் . கல்பு (இதயம்) சூக்குமமாகும். இவைகளுக்கெல்லாம் அப்பால் ரஸூலுல்லாஹ் மிஹ்ராஜ் சென்றார்கள். (ஹக்கில் நான் நீயென்னும் நிலையற்று இரண்டறக் கலந்தார்கள் ) இதனாலேயே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் " மன் ரஅனீ .".பகத் ரஅல் ஹக்க ( என்னை எவர் கண்டாரோ அவர் ஹக்கை கண்டார்)" என்றார்கள்.

 அதாவது எவர் எம்பெருமானாரின் தாற்பரியத்தைக் கண்டாரோ அவர் ஹக்கை கண்டார் என்பது தான் கருத்து.

 - ஹகாயிகுஸ்ஸபாவில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்.


அல்லாஹு தஆலா சொன்னான்.  மிஉராஜானது  நானல்லாத சர்வ வஸ்துக்களை விட்டும் அகன்று விடுதலாகும். மிஉராஜின்   பூரணமாவது , பார்வை மழுங்கவில்லை , இன்னும் அது மட்டைக் கடக்கவில்லை என்ற குர்ஆனிய  திருவாக்கியத்தின்  கருத்தாகும்.

விளக்கம் : மிஉராஜ் என்பது இறைவனல்லாத   மற்றெல்லவற்றையும்  விட்டு நீங்கியிருப்பது. இறைவனிலேயே தனது நாட்டத்தை  செலுத்தி  அவனல்லாத வேறில்லையென முழுமையாய் நினைத்து  நானும் அதுவும் ஒன்றே அதற்கும் எனக்கும் எந்தப்பிரிவும் இல்லை. நான் பூரணமாய்  அதிலானேன் எனக்கருதி  தன்னையும் தன எண்ணத்தையும் முழுமையாய் இறையில் அருப்பணிப்பதே மிஉராஜ்  எனும் உயர்ச் சியாகும். 

-ரிஸாலதுல் கெளதியாவில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்.

No comments:

Post a Comment