Tuesday, September 16, 2014

Quthbul Akthaab Jamaliya Syed Yaaseen Moulana Al Hassaniyyul Husseiniyul Hashimiyee Nayagam's 50th Kandhoori


அவ்னியா உலக அமைதி அறக்கட்டளை மற்றும்  ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில்  திருமுல்லைவாசலிலுள்ள பரிசுத்த அவதார சந்நிதானமும் ஈருலக ரட்சகர் முஹம்மது முஸ்தபா ரஸூலே  கறீம்  ஸல்லல்லாஹு    அலைஹிவஸ்ஸல்லாம்  அவர்களின் உள்ரங்க வெளிரங்க வாரிசும், கௌதுல்   அஉளம்  முஹிய்யுத்தீன்  ஆண்டகை (ரலி) அவர்களின் சம்பூர்ண பிரதிநிதியும், காலத்தின் இமாமும் ஆத்மா ஞான  குருநாதருமான  குத்புல் அக்தாப் ஜமாலிய்யா செய்யிது யாஸீன்  மௌலானா  அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய்  (ரலி) அவர்களின் 50 வது புனித கந்தூரி ஜியாரத் விழா 12.09.2012 வெள்ளி மாலை சனி இரவு   (ஹிஜ்ரி  1435  துல்கஹ்தா பிறை  17 )  புனித ராத்திபு மஜ்லீஸ்  மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும்   நடைபெற்றது.

வெளிநாடுகளிலிருந்தும்,  பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்திருந்த அவ்னியா உலக அமைதி அறக்கட்டளை மற்றும்   ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உறுப்பினர்களும், கலீபா பெருமக்களும், உள்ளூர் மக்களும் கலந்து கொண்டு  விழாவினை சிறப்பித்தனர்.

கலந்துகொண்ட அனைத்து முரீதுகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும், சிறுவர்களுக்கும் கந்தூரி  தப்ரூக்   உணவு வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து ஊர் முரீதீன்கள், அஹ்பாபுகள், பக்தர்கள் அனைவரும்   ஞானமகானின் அருளும் ஆசியும்  ஈருலக நற்பேறுகளையும்  இறைவனின் கருணையால் பெற்றுக்கொண்டார்கள்

ஆத்ம  ஞானச்சுடர்,  குத்புல் அக்தாப் ஜமாலிய்யா செய்யிது யாஸீன்  மௌலானா  அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்கள்  முஹம்மது நபி (ஸல்) அவர்களின்  33வது வழித்தோன்றலும் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின்  19வது  வழித்தோன்றலும் ஆவார்கள்.  குத்புல் அக்தாப் என்று எல்லோராலும் அன்பாகப்போற்றப்படும் இவர்கள் ஞான பூமியான இந்தியாவில் பல ஊர்களுக்கும் சென்று பலருக்கும்  ஞானதீட்சை அருளி இறுதியில் திருமுல்லைவாசலில் மறைந்து இன்றும் வாழ்ந்து மக்களுக்கு அருள் மழை பொழிந்து வருகிறார்கள்.

அவ்னியா உலக அமைதி அறக்கட்டளை மற்றும்  ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, உலகம் முழுவதும்   ஏழை  எளியவர்களுக்கும் அனாதைகளுக்கும் உதவி புரிவதில் முன்னணியில் இருந்து வருகிறது.  மேலும்  ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை  திருச்சியில்   ஏழை  மற்றும் அனாதை குழந்தைகளுக்கான ஒரு மதரசாவை முற்றிலும் இலவசமாக நடத்திவருகிறது. இந்த மதரசாவில்  உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இஸ்லாமியக்கல்வியுடன், பள்ளி மற்றும் பட்டப்படிப்பிற்கான வசதிகளுடன் தொழிற்கல்வி மற்றும் கம்ப்யூட்டர் கல்வியும் கற்றுத்தரப்படுகிறது.    
 இந்த ஆன்மீக, மனித நேய, சமுதாய நல்லிணக்க  இயக்கத்தின் ஸ்தாபகரும் ஆன்மீக ஞான குருவுமாகிய  முஹம்மது நபி   ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லாம் அவர்களின் உள்ரங்க வெளிரங்க வாரிசும், குத்புல் அக்தாப் ஜமாலிய்யா செய்யிது யாஸீன்  மௌலானா  அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்களின் வாரிசுமான  ஷெய்குள் காமில் குதுபுஸ்ஸமான்  ஷம்சுல் வுஜுது ஜமாலிய்யா செய்யது கலீல் அவ்ன் மௌலான அல்ஹஸனியுள் ஹுஸைனியுள் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் வழி காட்டுதலின்படி  இந்த சமுதயப்பணிகள் சிறப்பாக  நடைபெற்றுவருகின்றன.  
















50 வது   ஆண்டு கந்தூரி ஜியாரத் பொன் விழா  சிறப்பு நூல் வெளியீட்டு விழாவும், இறை அருட்பா குறுந்தகடு வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி  அவர்களும் சிறப்புரை ஆற்றினார். மௌலவி தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்.



முக்கிய நிகழ்வுகள் 

நிகழ்ச்சியின் துவக்கம்
பர்ஸன்ஸி மௌலிது 
50ம் ஆண்டு பொன்விழா சிறப்பு மலர் வெளியீடு
இறையருட்பா இசைத்தட்டு வெளியீடு
தந்தை நாயகத்தைப் பற்றிய சிறப்பான உரை  மௌலவி ஹாபிழ் எம்.ஷேக்அப்துல்லாஹ் ஜமாலிய் எம்.ஏ. அவர்கள்
மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் இராத்திபத்துல் காதிரிய்யா 





No comments:

Post a Comment