ஒருவர் நன்கு முயன்று கெட்டித்தனமாகப் படித்தால் வைத்தியரொருவராகலாம். அல்லது பொறியாளர் ஆகலாம். ஆனால், ஞானமில்லாத எந்தவொரு படிப்பும், அறிவும் பிரயோசனமற்றது.
ஞானம் என்பது அல்லாஹ்வை அறிவது. ஞானத்தின் மூலம் கலிமாவாகும். கலிமா என்பது நம்மிலும் நம்மிலிருந்து பரந்து விரிந்து நிலம், நீர், தாவரம், மரம், மட்டை, வானம், பூமி, அண்ட சராசரங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. பரிபூரணமாக வியாபித்துள்ளது. எங்கும்பிரிவிலாதது. பிரிக்க முடியாதது. எனவே,கலிமாவின் உட்கருத்தை உணர்ந்தவர் தாம் காணும் மிருகங்கள், பட்சிகள் அதனின் (கலிமாவின்) ஒரு பகுதிதான் என்பதனை உணர்ந்துகொள்வர். ஒரு மரத்தில் பல கிளைகள் இருந்தாலும் அவையனைத்தும் அம்மரத்தின் பகுதிகளே என்பதனையும் உணர்வர்.
இவையனைத்தும்ஒன்றிலிருந்து உதயமானவை. அது, இது எனும் வேறுபாடு இல்லை, நீ நான் எனும் பிரிவேதுமில்லை என்பதனையும் உணர்வர். இந்தக் கூற்றுகளையெல்லாம் நன்கு சிந்தித்தாலே போதுமானது.
(சங்கை மிகு செய்கு நாயகம் அவர்கள்)
நிறமற்ற நீரி னுண்மை
நிரமுற்ற வைகள் தன்மை
மறமற்ற பிர்ம உண்மை
வடிவாதல் வாழ்வில் நன்மை
பூதங்க ளைந்து பேதம்
பூண்டாலும் பூர்ண நாமம்
பேதங்க ளின்றி விரவிப்
பெயர்கொண்ட ஞான வருவி
ஞான மறிந்த உன்னை
ஞாலங்கள் போற்றும் தன்மை
தானத்திற் றலைமை தன்னை
தாங்கும் தகைமை உண்மை
(சங்கை மிகு செய்கு நாயகம் அவர்கள்)
நிரமுற்ற வைகள் தன்மை
மறமற்ற பிர்ம உண்மை
வடிவாதல் வாழ்வில் நன்மை
பூதங்க ளைந்து பேதம்
பூண்டாலும் பூர்ண நாமம்
பேதங்க ளின்றி விரவிப்
பெயர்கொண்ட ஞான வருவி
ஞான மறிந்த உன்னை
ஞாலங்கள் போற்றும் தன்மை
தானத்திற் றலைமை தன்னை
தாங்கும் தகைமை உண்மை

No comments:
Post a Comment