Friday, March 1, 2013
பதுறு சஹாபாக்களை நினைவு கூர்வோம்!
எமது வயது பத்திருக்கும். எம் அருமைத் தாயார் அவர்கள் பதுறு மெளலிது எனும் நூலை வாங்கி எம் கையிற்கொடுத்து ஓதிவருமாறு கேட்டுக் கொண்டார்கள். நம் ஊர்ப் பகுதிகளில் வழக்கமாகவே யாவரும் பதுறு மெளலிது ஓதி வருதல் வழக்கம். இதனால் அவர்கள் இறைவனின் அதிகமான பாதுகாப்பையும் வாழ்விற் செழிப்பையும் அடைந்து வந்துள்ளனர்; அடைந்தும் வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். எம் அருமைத் தாயார் எமக்குக் கூறிய வண்ணமே ஓதிவந்தோம். இன்றும் ஓதிவருகின்றோம். யான்பெறும் இன்பம் அனைவரும் பெறுகவென்னும் நல்லெண்ணத்தால் நம் முரீத்களும் இதை ஓதி விளங்கி அவர்களும் பாதுகாப்பையும் பல நன்மைகளையும் அடைய வேண்டும் என்னும் எண்ணம் எமதுள்ளத்தை உந்தவும், ஓய்வின்மையால் தாமதப்படுத்தி வந்தோம். அப்போதோரிரவு கனவில் மனிதர் ஒருவர் தோன்றி இவ்வருண்மிக்க நூலை எம் கரங்களிற்றந்தார். அவர் இந்நூலை எமக்குத் தந்தமை மொழிபெயர்க்கவே என்று எம் மனம் அக்கனவின் கண்ணேயே உணர்த்திற்று. இனிமேற்றாமதித்தல் நன்றன்று என்று அன்றே என்றனெழுத்தைத் தொடங்கலானேன். அஃதே, இஃதுங்கள் கரங்களிற்றாங்கியுள்ளது. (பதுறு மவ்லிதுமொழி பெயர்ப்பு நூல் முன்னுரையில் சங்கைமிகு செய்குநாயகம் அவர்கள்)
பதுறு மவ்லிதில் வரும் அறபு
பைத்துக்கு தமிழ்ப்பாடல்.
அவ்லியாக்க ளின்குதுபு
மார்களான இரட்சகரை
அவ்வலான அல்லாஹ் என்றும்
அன்புடனே பொருந்தினனே
வாழ்வதிலே சஞ்சலத்தில்
வாட்டும்மிடு மையழிவில்
ஆழ்பவரே அழைத்திடுவீர்
அருமைபது ரீங்களென்றே
துன்பம்துயர் நிறைந்தவரே
தூயபதுர்க ளிடத்தே
பண்பாயணுகி யழைப்பீர்
பதுருஸஹா பாக்களென்றே.
அமுத மொழிகள்
சாதனைகள் உளக்கலக்கம்
தோன்றிடும்போதினிலெல்லாம்
நீதர்பது ரீங்கள்தம்மை
நித்தமழைத்துய்திடுவீர்.
தக்கபதுர் களேஉங்கள்
தகைமையால்பாபிகளும்
மிக்கதுய ருடையவரும்
மீண்டும்ஜயமடைந்தனரே.
பதுரீன்கள்தம் பொருட்டினாலும்
பதியுமெங்கள்நாட்டங்களைத்
துதிகூறவே நிறைவேற்றுவாய்
சோதனையும்துயர்நீக்குவாய்.
சஞ்சலங்கள் நீக்கிடுவாய்
தங்கடங்கள்போக்கிடுவாய்
வஞ்சமதை நீக்கிநல்ல
வாழ்வதனைத்தந்திடுவாய்.
எம்மிறைவா ஆசையுடன்
ஈதுன்னிடம்வந்தண்டினோம்
உம்மிடமே தேட்டமுடன்
உண்மையுடன்வந்தடுத்தோம்.
ஆதலாலே பேறுகெட்ட
அன்னவர்போலாக்கிடாதே
தீதுடனே விரட்டிடாதே
தேட்டமறவாக்கிடாதே.
மாட்சிமையே பொருந்தியநீ
மன்னுசிறப்புடையவனீ
ஈட்டமதாம் பதுரீன்களால்
இன்கருணைபொழிந்தருள்வாய்
நாயகத்தின் மீதுமவர்
நல்லகிளையார்கள்மீதும்
தூயபது ரீன்கள்மீதும்
சுத்தஸலவாத்துரைப்பாய்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment