Tuesday, February 26, 2013

ஹகாயிகுஸ்ஸபாவில்..... சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்





ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு சமூகத்தை அமைக்கும் பொறுப்பு உண்டு. அதை உணர்ந்து நாயகம் (ஸல்) அவர்களின் வழியில் நடந்து உண்மையான சிறப்பான சமூகம் உருவாக்குவோம்.

*
பெருமானார் (ஸல்) அவர்கள் ஸஹாபாப் பெருமக்களுக்கு ஆசிரியராக இருந்து இஸ்லாம் எனும் தரீக்காவை (நேரான வழியை)க் கற்றுத் தந்தார்கள்.

*
வஹ்தத்துல் வுஜூதைக் கொண்டு வந்ததே ரசூல் (ஸல்) அவர்கள் தாம். அல்லாஹ் எனும் சொல்லே வஹ்தத்துல் வுஜூதுதான்.

முரீதாகிய சிஷ்யனுக்கு அன்னாரின் பீர் ஆகிய ஞானோபதேசிகர் சர்க்கரை, கற்கண்டு ஆகியவற்றிலும் மேலான இன்பத்தையுடையவர்.

""
அல்லா(ஹ்)வாகிறவன் ரோஜா மலளரைப் போலும், நபி (ஸல்) அவர்கள் சர்க்கரையைப் போலும், குருபிரான் பூவும் சர்க்கரையும் கலந்த இன்பமும் மணமுமுடைய குல்கந்து போலுமிருக்குமென்று நீ அறிவாயாக!'' என்று பாரசீகக் கவிஞர் ஒருவர் பாடியிருக்கிறார்.

""
எவனொருவன் குருபிரானையும் அல்லா(ஹ்)வின் தாத்தாகிய சுயார்த்த ரூபத்தையும் ஏகமாகக் காணவில்லையோ அவன் முரீது ஆகிய உண்மை சிஷ்யனாகான்! உண்மை சிஷ்யனாகான்! உண்மை சிஷ்யனாகான்!!!'' என்று மெளலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள் தங்கள் மஸ்னவீ சரீபு என்னும் கிரந்தத்தில் கூறியுள்ளார்கள்.

வெளவால் கண்ணுக்குச் சூரியன் தெரியாதது போல் அறிவிலிகளுக்கு எங்ஙனம் ஹக்கின் தரிசனம் கிடைக்கும்? வெளவால் எங்ஙனம் சூரியன் தனக்குத் தெரியவில்லையயன்று கூறுமோ, அங்ஙனமே தங்களுக்கு ஹக்குடைய தரிசனம் கிடைக்கவில்லையயன்று சொன்னால், அந்த வெளவாலையும் அவ்வெளவாலின் குணம் படைத்தோரையும் அவர்கள் போக்கில் விட்டு விட்டு நீ யாவற்றுடனும் ஒற்றுமையாயிருந்து கொள்! வெளவாலையும் தொந்தரவிலாக்கி நீயும் தொந்தரவடையாதே!

மனிதன் ஒருவன் வெகு நாட்களாகத் தோட்டம் பார்க்க வேண்டுமென்ற ஆசையினால் பூங்காவனத்தை விட்டுப் பிரிந்த பிரிவாற்றாமையைச் சகிக்காத புல் புல் பறவையைப் போன்று வாட்டமுற்றிருந்ததால் ஒரு சிறந்த மனிதர் அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, இதுதான் தோட்டம்; பார்க்க வேண்டியவற்றையயல்லாம் நீ நன்கு சுற்றிப் பார்த்துக் கொள்! என்று சொன்னார். தோட்டம் பார்க்க வந்தவன் நிர்மூடனாகவிருந்ததால், தோட்டம் யாதென்று விளங்காது, குளம், கிணறு, தண்ணீர், வாய்க்கால், தென்னை, மாதுளை, வாழை, இலந்தை, முந்திரி, மல்லிகை, முல்லை ஆகியவைதானே தென்படுகின்றன. தோட்டம் என்பது யாது? எங்கிருக்கிறது? அதனை எனக்குக் காட்டி வைக்க வேண்டும் என்று அவன் கேட்டபோது மற்றவர் திகைத்துப் போய் உனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. வெளியே போ! என்று அவனைக் கோபித்துத் தன்னை விட்டும் விரட்டி விட்டார்.

-
ஹகாயிகுஸ்ஸபாவில்..... சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்

No comments:

Post a Comment