தற்பெருமை, பொறாமை,எனக்குத் தான் எல்லாம் தெரியும் எனும் மமதை, மற்றவர்களை மக்கள் மத்தியில் வைத்து இழிவுபடுத்துவது போன்ற செயற்பாடுகள் எல்லாம் ஒரு மனிதனை இழிவுபடுத்திவிடும். மற்றவர் சொல்வதில் உண்மை இருக்க தன்னலனுக்காக அதைப் பொய்ப்படுத்த முனைதல்,ஒன்றைச் செய்ய முடியுமாய் இருக்க ஒரு சிலரின் கோபத்திற்காக அது தனக்கு முடியாத காரியம் எனக் கூறி மற்றவர்களின் மனதையும் கெடுத்தல் போன்ற அடாச் செயல்கள் ஒருமனிதனின் உள்ளத்து ஒளிவை அமாவாசையாக்கி விடும்.
உள்ளத்துள் கள்ளம் இருக்கக்கூடாது. கள்ளம் என்னும் கறை உள்ளத்துள் பதிந்து விட்டால் அவனைச் சீர் திருத்துவதே முடியாத காரியமாகி விடும். அந்தக் கறையைப் போக்க கெமிகல்களும் இல்லை.
நாம் ஆணையிட்டுள்ள காரியங்களை இனிதே செய்யாது அக்காரியங்களிற் பராமுகமாக இருப்பது நம்மை இழிவுபடுத்துவது.
ஒரு காலத்தில் ஞானம் அழிந்து போனதற்குக் காரணமாக இருந்தவர்களே இப்படிப்பட்ட திறமைசாலிகள். எது எப்படியிருப்பினும் வருங்காலம் ஞானம் நிறைந்த காலமாகவிருந்து வஹ்ஹாபி எதிரிகளை அடியோடு அழிக்கும் மருந்தாகத் தெளஹீத் ஆக வேண்டும் என்பதே நமது முக்கிய எண்ணம்.
( சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் நமது உதவி ஆசிரியர் மெளலவி அப்துஸ்ஸலாம்
ஆலிம் அவர்களுக்கு அருளிய பட்டோலையிலிருந்து )
No comments:
Post a Comment