இலக்கியமே ஓர் ஆழி
நேர்கண்டவர் : முகமது ஹிஜாஸ்
இலக்கியமே ஓர் ஆழி,அதிற் கரை காண்டலில் விழைதலே அறிஞர் கடன். இலக்கிய மின்றேல் எதனினும் இன்பம் இராது. ஜமாலிய்யா ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஜமாலிய்யா ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் இளம் வயதிலேயே திருக்குர்ஆனை முழுவதுமாக ஓதிமுடித்து விட்டார்கள். திருக்குர்ஆன் ஓத தொடங்கியது முதல் மற்ற எல்லா அரபுக் கலைகளையும் அருமைத் தந்தையாரான ஜமாலிய்யா ஸெய்யித் யாஸீன் மௌலானாவிடமே முறைப்படி கற்றுத் தேர்ந்தார்கள். அதே போன்று வாழ்க்கைப் பாடத்தையும் தம் தந்தையாரிடமே முறையாகக் கற்று சன்மார்க்க ஞானமேதையாகவும் தமிழ்ப் புலவராகவும் திகழ்கிறார்கள்.
s.s.c. தேர்வுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்கள். பின்னர் காலி என்னும் ஊரில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வியைப் பூர்த்தி செய்த இவர் தமிழ் மொழி, அரபு மொழி, இஸ்லாமிய நாகரிகம் போன்ற பாடங்களைப் போதித்து பின்னர் அதிபராகவும், வட்டாரக் கல்வி அதிகாரியாகவும் கல்வி அதிகாரியாகவும் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார்கள் . அரபு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சம பாண்டித்தியம் பெற்றுள்ள கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும், இஸ்லாமிய இலக்கியத்துக்கும், தன்னை அறியும் மெய்ஞானத்துக்கும் இவர் ஈழத்தின் ஒரு மூலையிலிருந்து கொண்டு தனது 77ஆவது வயதிலும் ஆரவாரமின்றி அழகுதமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர்கள் சங்கமத்துக்கு வழங்கிய நேர்காணலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எழுத்தாளர்களுடன் அல்லாது இந்திய எழுத்தாளர்களுடன் இணைந்து செயற்பட காரணம் என்ன?
இலங்கையில் கதவு தாழிடப்பட்டிருந்தது. புகுத முடியவில்லை. எனினும் இந்தியாவில் கதவு விரியத் திறக்கப்பட்டிருந்தது. அங்கு புகுதலில் எளிது கண்டேன். அதனாலேயே நாம் எழுதும் நூல்களனைத்தும் அங்கேயே அச்சிடப்பட்டன, அச்சிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கு அதிக வரவேற்பு இருந்தது. இதனாலேயே இந்திய எழுத்தாளர்களுடன் இணைந்து செயற்படக் காரணமாயிற்றென்பேன்.
ஆரம்பகால இலக்கியத்துக்கும் தற்கால இலக்கியத்துக்கும் எவ்வாறான வேறுபாடு காணப்படுகின்றது.?
எமது ஆரம்பகால இலக்கியம் சங்க கால இலக்கிய நூல்களுடன் தொடர்புடைத்து. எமது வயது பதினேழுக்கு மேல் மரபுக் கவிதைகள் எழுதுவதில் மிக்கார்வங்கொண்டு எழுதி வந்தோம். அன்றிலிருந்து இன்று வரை எழுதப்படும் பாக்கள் யாவும் யாப்பிலக்கண அமைவு கொண்டுள்ளமையால் அன்றும் இன்றும் தரத்தில் ஒரே நிலை கொண்டது. யாப்பிலக்கண ஒழுங்கு முறைப்படியே புதுப்பாக்களையும் எழுதுவோம். பாட்டுக்கு எதுகையும் மோனையும் உயிர் போன்றவை. யாப்பிலக்கண வழுவின்றி பா வமைத்தலையே புலவர்கள் விரும்புவார்கள். முன்னை விட இப்போது யாத்துவரும் இலக்கிய நூல்கள் மிக்கன. (அதிகம்)
நீங்கள் துறவற நிலைக்கு .செல்ல வேண்டி ஏற்பட்டதன் காரணம் என்ன?
எம் குடும்பத்து முன்னோர்களில் அதிகம் பேர் இல்லத்துறவு பூண்டவர்களே. வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட துறவு எனின் சாலும். எமது துறவறம் இல்ல மனையாளையும் பிள்ளையையும் துறந்து கானகமேகுவதன்று. இதனையே நாம் இல்லத்துறவு என்போம்.
எவ்வாறான புத்தகங்களை எழுதுவதற்கு நாட்டம் கொள்வீர்கள்? இதுவரை எத்தனை நூல்களை எழுதியுள்ளீர்கள்?
புராணங்கள், கவிதைகள் முதலான இவையாவும் யாப்பிலக்கண அமைவோடு அமைவதையே நாம் விரும்புகிறோம். புது வகைக் கவிதைகள் (பாரதியார் எழுதிய கவிதைகளைப் பின்பற்றியும்) நூல்கள் எழுதியுள்ளோம். இப்போது உமர் (ரலி) புராணம் எனும் பெயருடன் ஒரு புராணம் எழுதிவருகிறோம். ஓரிலக்கண நூலும் எழுதிவருகிறோம். யாப்பிலும் ஒருவிளக்க நூல் எழுதுகிறோம். இது வரை இருபது நூல்களுக்குமேல் எழுதியுள்ளோம் . இன்னும் பல நூல்கள் அச்சிடற்குள்ளன.
இவ்வளவு காலம் இலக்கியத்துறையில் இருந்தும் நீங்கள் வெளியுலகிற்கு வராமல் இருந்ததற்கான காரணம் என்ன?
முன்னர் ௦2 இலும் இதுபற்றி எழுதியுள்ளோம். பகைவரும் பொறாமைக்காரரும் இதற்குத் தடைக்கல்லாயமைந்திருப்பர் எனக்கருதுகிறோம்.
சாதாரணமாக எழுத்தாளர் ஒருவரின் பணி எவ்வாறு இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?
நம்பணி பணத்துக்காக வெனக் கருதாதிருத்தல் வேண்டும். பெருமைக் கெழுதாமல் இலக்கியங்களுக்கு ஏற்ற தரத்தில் எழுதல் வேண்டும். சங்ககால இலக்கியத்துக்கு அதன் தரத்திற்கமைந்த நடையில் எழுதல் வேண்டும். எதை எவர் வாசிக்கிறாரோ அவருக்கது பொருத்தமான நடையாக அமைவது சிறந்தது. சிறந்த இலக்கியத்தை பத்திரிகைத் தமிழுடன் கலத்தல் நல்லதன்று என்பது எம்கருத்து. எதை எவர் விரும்புகிறாரோ அதற்கேற்ற விளக்கம் அதில் இருத்தல் வேண்டும்.
இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறவிரும்புவது என்ன?
மனங்களுக்கேற்ற புதுப்புது கல்வியைத்தரும் கலைத்துறைக்குகந்த நல்ல விடயங்களை எழுதல் அவசியம். பார்த்ததையே பார்த்து பிரதிபன்ணாமல் மனதுக்கேற்ற நல்ல புதுவிடயங்களை எழுத்தாளர்கள் அமைத்துக் கொள்ளல் வேண்டும். நல்ல இலக்கியச் சொற்களை அமைத்துக்கொள்ளல் வேண்டும். சொல்லாராய்ச்சியோடு எழுதல் வேண்டும். பல்லுடைக்கும் தமிழ் என்றெல்லாம் கூறி கம்பராமாயணம், சீறா புராணம் முதலான மற்றும் சங்ககால இலக்கிய நூல்களை உதாசீனம் செய்யாதிருத்தல் வேண்டும். ஆயின் சொல்வளர்ச்சி குன்றி தாயினும் தந்தையினும் பேச்சு வழக்குகள் எம்மில் ஊன்றிவிடும். அதனை எளிய தமிழெனவும் சொல்ல முடியாது. கொச்சைத் தமிழ் வழக்கில் அது அமைந்துவிடும். இவையெல்லாம் கவனித்து எழுதுதலே இலக்கணத்துக்கும் இலக்கியத்துக்கும் தொண்டு செய்தல் எனவாகும்.
நீங்கள் வெளியிட்டுள்ள புத்தகங்கள் பற்றி-?
மகானந்தாலங்கார மாலை – (சித்திரக் கவிதை)
ஈழவள நாட்டிற் பயிர் பெருக்க வாரீர். (இலங்கை சாகித்திய மன்றத்தில் பரிசு பெற்றது) பேரின்பப் பாதை (ஞான விளக்கம் தமிழில்) மனிதா! (அமுத மொழித் தொகுப்பு) கஸீததுல் அஹ்மதிய்யா (அரபு தமிழ் வாரிதாது பாக்கள்), தாகிபிரபம் (ஞான விளக்கம்), இறையருட்பா (ஞானக் கவிதைகள்), அற்புத அகில நாதர் (கவிதை), நாயகர் பன்னிரு பாடல் (கவிதை), அவன் நாயகர் அருள் மொழிக் கோவை (ஆங்கிலம்,தமிழ்) பத்று மௌலிது (அரபு மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு), பர்சன்ஜி மௌலித் (அரபு மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு), துஹ்பதுல் முர்ஸலா (அரபு மூலம் தமிழ் மொழிபெயர்ப்பும் விளக்கமும்.), றிஸாலத்துல் கௌதிய்யா (தமிழ் மொழிபெயர்ப்பும் விளக்கமும்.) ஹகாயிகுஸ் ஸபா (பரமார்த்தத் தெளிவு ), மருள் நீக்கிய மாநபி , நபி வழி நம் வழி ,ஒளியை மறைக்க துணியும் தூசு இறைவலிய் ஸய்யிது முஹம்மது மௌலானா (கவிதை), உண்மை விளக்கம், குறிஞ்சிச் சுவை ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அது மாத்திரம் அல்ல அடுத்தவருட முதற் பகுதியில் நூல்களை வெளியிடவும் உள்ளார்கள்.

No comments:
Post a Comment