அப்பாஸியாக்கள்
இஸ்லாமிய ஆட்சியின் பொற்காலம் அப்பாஸியாக்களின் ஆட்சிக்காலம் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படுகிறது.
அப்பாஸிய ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய ஆட்சி விஸ்திரமாக விரிவுபடுத்தப்பட்டது, மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டின் உச்சத்தைத் தொட்டது, மொழிபெயர்ப்பு நூற்கள், தர்க்க நூற்கள்,போதனை நூற்கள், வருணனை நூற்கள், கதை நூற்கள், வரி செலுத்துதல் செலவுசெய்தல், குற்றவாளி, தண்டனை பற்றிய நூற்கள் என வாழ்வின் அத்தனை அம்சங்களையும் பிரதிபலிக்கும் நூற்கள் இயற்றப்பட்டன.
மாபெரும் கவிஞர்கள், சொற்பொழிவாளர்கள், அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், விரிவுரையாளர்கள் தோன்றினர்.
புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் அப்பாஸியாக்களின் ஆட்சிக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இரசாயனம், மருத்துவம், விண்ணியல் என அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்கள் முன்னோடிகளாக விளங்கினர். பிக்ஹு எனும் மார்க்க சட்ட அறிவின் மூலமாகிய மத்ஹபுகளும் அக்காலத்தில்தான் முழுவடிவம் பெற்றது.
உலகின் எந்த விஷயத்தையும் முடிவு செய்யும் முக்கிய கேந்திரமாக இன்று அமேரிக்கா இருப்பது போல அன்று பக்தாது(ஈராக்) விளங்கியது.
கி.பி. 750 முதல் 1258 வரை ஆட்சி புரிந்த அப்பாஸிய ஆட்ச்சியின் உன்னத மேன்மையை உரிய முறையில் பதிவு செய்திருக்கிறார்கள் இதன் ஆசிரியர் ஜமாலிய்யா ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள்.
-Hisam Hijas

No comments:
Post a Comment