Tuesday, January 6, 2015

ஹகாஇகுஸ் ஸபா (பரமார்த்தத் தெளிவு )





ஹகாஇகுஸ் ஸபா (பரமார்த்தத் தெளிவு )

மனிதன் மனிதனாய் வாழ வேண்டுமானால், தன்னிடத்தேயுள்ள மிருகத்தன்மையை நீக்கி நல்லெண்ணத்தை உள்ளத்தில் பதியச்செய்ய வேண்டுமானால் தானும் உள்ளமை, தன்னைச் சூழ உள்ளவைகளும் உள்ளமை என்பதை உள்ளார உணரவேண்டும். அவன் தன்னை யாரென அறிந்து கொள்ள வேண்டும். அதனை விளக்க வந்த தெள்ளிய நூலே ஹகாஇகுஸ் ஸபா எனும் நூல். இந்நூல் ஏகத்துவ ஞானக்கலை விளக்கத்திற்கு ஒரு சிறந்த நூல். ஹகாஇகுஸ் ஸபா என்பதன் கருத்து பரமார்த்தத் தெளிவு என்பதாகும்.
இந்நூலின் மூல நூல் பூர்பி மொழியில் கவிதைத் திரட்டாக இயற்றப்பட்ட “மன்லகன்” என்பதாகும். இம்மூல நூலின் ஆசிரியர் ஹஸ்ரத் மௌலானா மஹ்மூதுல் பஹ்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும். மன்லகன் என்ற நூலை மூலமாகக் கொண்டு நாகூர் ஷரீபைச் சேர்ந்த ஹஸ்ரத் மௌலானா சாஹிப் என்ற ஷாஹ் முஹம்மது கௌது சாஹிப் அவர்கள் அரபுத் தமிழில் - ஹகாஇகுஸ் சபா என்னும் நூலை எழுதினார். இதனை ம.மு. மஸ்தான் லெப்பை அவர்கள் தமிழில் எழுதி வெளியிட்டார்.
மெய்ஞ்ஞானத்தைத் சரியாக அறிமுகப்படுத்தும் இந்நூல் பல பக்கங்களைக் கொண்டு பெரிதாக இருப்பதாலும் சில இடங்களில் விளக்கமும் – தெளிவும் அவசியம் தேவைப்பட்டதாலும் ஆத்மா குருநாதர், நபிகளாரின் திருப்பேரர், ஜமாலிய்யா ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்களிடம் தெளிவுரை எழுதித்தர வேண்டுமென அவர்களின் முரீதீன்கள் வேண்டிக் கொண்டதற்க்கிணங்க அழகிய விளக்கமும்- தெளிவுரையும் எழுதி வெளிவந்திருக்கும் நூலே ஹகாஇகுஸ் ஸபா (பரமார்த்தத் தெளிவு) எனும் நூலாகும்.

-Hisam Hijas

No comments:

Post a Comment